Friday, February 19, 2010

 
பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான
மழை.
 
ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்
குழந்தைக்கு
நனைவதே பிடிக்கிறது !

.
 

ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.



1 comment:

  1. மழையே..
    நீயும் தாய் தான்
    என்னை தாலாட்டுவதில்..
    உங்கள் கவிதைகள் அருமை!!!

    ReplyDelete