Sunday, November 29, 2009

முத்தத்தில்"
காதல் சொல்வதில்...
உனக்கு நிகர்
நீதான்..!
**********************************
ஏதாவது சொல்லி
உன் கை பிடிக்கத்தான்...
நான்"கைரேகை சாஸ்திரமே"
தெரிந்து கொண்டேன்....!
************************************

அழகு...!
வெள்ளை காகிதமும் இன்று
அழகாக தெரிகிறது
என் கண்களுக்கு..!
உன்னை
பற்றி எழுதும் போது..!
நீ
பேச தொடங்கியதும்...
உன் அக்காள் 'நிலவு...,'
என்னுடன்
பேசுவதை நிறுத்தி கொண்டாள்..!?
****************************************
கண்ணாமூச்சி விளையாடினாய்
குழந்தைகளோடு..
நாள் முழுவதும் நான் குருடாகி திரிந்தேன்... .!!
***************************************

நீ தனித்துவம் வாய்ந்தவள்...
மன்னிக்கவும் எதோடும்
ஒப்பிட முடியாது என்னால்..!?
****************************************
எனக்குள்ளே பட்டிமன்றம் நடக்கிறது..
நீ அழகா..இல்லை
உன் கையெழுத்து அழகா.. என்று?
**************************************

என்ன ஒரு வேதனை...
ஒரு உயிர்...
இரண்டு உடல்களில் பிரிந்து
கிடக்கிறதே..?!
*************************************
உன் பார்வை....
என் மொத்தத்தின்
நங்கூரம்..?!
***********************************

பேனா...!

என்னவளே உன்னை
வர்ணித்து எழுதிய
பேனா இப்போது
எழுத மறுக்கின்றது - எனென்றால்
உன்னை வர்ணித்து
எழுத வார்த்தைகள்
இல்லை என்பதலோ...!
பொறுமை....!
பெண்ணே!
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் சொல்ல
என் கல்லறைக்கா
வருவது....!
 

Thursday, November 26, 2009

உனக்காக
என்றாலே ....
இனம் புரியா சந்தோசம் ....
இருக்கிறது ..
எனக்கான வலிகளை மறந்து
என் விழியின் நீரை கடந்து
உன்னுடன் பேசுகையில்
உனக்காக பொய்யாய் சிரிப்பதில் கூடத்தான் ........
உயிரே !!!!!!

தேடல்

எங்கு
இருக்கிறாய் ????
என் தேடல் புரியவில்லையா ...
என் காத்திருப்பு தொடர்கிறது .....
என் கண்களுக்கு தெரியாமல் நீ இருந்தாலும் .....
என் பொழுதுகள் உன்னுடன் மறக்க இயலாதவை .....
என் ரசனைகளின் உயிரோவியம் நீ !!!!!!!
எங்கிருந்து கிடைத்தது இந்த வாசனை உனக்கு ....
எனக்கு கடன் கொடுத்திடு அழகே !!!!!!!!!!!!
என்னை தழுவி செல்லும் பொழுதெல்லாம்
என் உயிருக்குள் மின்னல் வெட்டும் !!!!
என்னை நீ முத்தமிடும் ஒவொரு முறையும் ....
என் ஜீவன் புதிதாய் பிறக்கும் !!!!!!!!
என்னுடன் நீ வருகையில் நனைகிறது
என் பாதம் உன் அன்பினால் !!!!!
இந்த உலகமே உன்னை தடுத்தாலும்
என் இருபது வருட தீரா காதல்
என்னில் அணையா தீயை
என்கிருகிறாய் அணைத்திட வந்துவிடு ...................
மழையே...................................................................
 

நிஜம் அதுதானே

நீ
என்னை
மறந்து விட்டாய் ....
ஏற்று கொள்ளவில்லை
என்பது
ஒருபக்கம் ஆனாலும்
மறக்கவே முடியாத
நம் கடந்த காலங்கள் !!!!!
எப்போதும் ஈரப்படுத்தும்
என் இதயத்தை !!!!!
எதிலும் உன் நியாபகத்தை
எடுத்து சொல்லும் அவைகள் .......
எப்போதாவது உனக்குள்ளும்
வந்துவிட்டு செல்லும் அல்லவா!!!!!!

புன்னகை

என் மனம் பறிபோனது ......
அந்த ஒற்றை புன்னகையில் !!!
முத்துகள் சிதறியது போல ...
அதை
காணும் போதெல்லாம்
கடவுளுக்கு கை கொடுக்கிறேன்
என் தேவதையை படைத்தற்காக !!!
இரவு
@@@@
ஒவொரு நாளும் உன் வரவுக்காய் !!!!!
என் இதயம் காத்திருக்கிறது !!!!
உயிர்கள் அனைத்தும் உறங்கி போனாலும்
நான் மட்டும் தூங்கவில்லை
எங்கும் இல்லாத அமைதி
உன்னை ரசிப்பதில் இருக்கிறது .....
உன் ஆடை என்ன நட்சத்திரங்களா ???????????
நிலவை விட்டுவிடு அன்பே .....!
நான் வருகிறேன் உனக்கு துணையாய் ....
'' நித்தம் முழுமதியாய் ''....!!!!!!
என் கவிதைகள் @@@
நான் உனக்காக
நினைப்பதை சொல்லாமல்
போனாலும் ......
என் கவிதைகளில் ..
உன் தாக்கம் ......!!!!!
மறைமுகமாய் நம்
உறவை பிரதிபலிக்கும்
அவை எப்போதும்
என் குரலை உன்னிடம்
பதிவு செய்ததாலோ
என்னவோ .....
நானும் கவிநன் அகிவிட்டேன்
எழுதுவது நான் ஆனாலும்
உரிமை என்பது
உனக்கு மட்டுமே
உயிரே !!!!!


நானும் @@@@@
எப்படியோ நண்பர்கள் ஆனோம் !!
கொஞ்சம் பரஸ்பரம் !!!!
கொஞ்சம் அறிமுகம்!!!!
அதற்கு மேல் ஏதுமில்லை!!
கனவிலும் நினைத்ததில்லை !!
நானும் காதலிப்பேன் என்று !!
என்னிலும் மாறுபட்ட உன்னை !!
காதல்!!
காற்று !!!!!!!!!!!!!!
அலை போல
எபோது ,எங்கு ,யாருடன் .
என நிர்ணயிக்க முடியாதது !!
என்னவோ மாற்றங்கள் !!
உன்னை பார்த்த பின்
உலகம் அழகாய் தெரிந்தது !!
எதிலும் எங்கும் !!
உன்னை பார்க்கிறேன்!!
ஒவொரு நாளும்!!
உனக்காக விழிக்கிறேன் !!
விழிகளில் தூக்கமில்லை !!
இதயத்தை தொலைத்துவிட்டேன்
உன்னிடம் !!
திரும்ப கொடுத்துவிடு .....
என் இதயம் அல்ல ......
உன் இதயத்தை......
இனம் புரியாத சந்தோஷம்
இதுவரை என் வாழ்வில் .....
இல்லாத ஒன்று !!!!.............
என் உயிர் முழுக்க கலந்து விட்ட
உன்னுடன் !!
வாழ விரும்புகிறேன் !!!!!!!
என் ஆயுள் முழுவதும் !!!!!!

Wednesday, November 25, 2009


சிரிப்பு

முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்


அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

ஒரு மரம் பேசுகிறது...

ஒரு மரம் பேசுகிறது...
----------------------------------
மனிதனே
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்
உதவுகிறாய் நீ...
நல்லவனோ கெட்டவனோ
நிழல் தருகிறேன் நான்...

மழைச்செல்வம் தேடித்தருவதும்
இயற்கை அழிவிலிருந்து
உன்னைக் காப்பதும்
நானில்லையா?

மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட
இன்னும் இன்னும்
நன்மைகள் பலப்பல...

எனினும் ...மானிடனே
அற்ப காரணத்துக்கெல்லாம்
அடியோடு வீழ்த்துகிறாயே...
சிசுக் கொலைதான்
பாவமா...
என்னைக் கொல்வது
பாவமில்லையா...?

கவியரசு கண்ணதாசனின் கவிதை

பெரியார்க்குப் பெரும் வாய்ப்பு அவர்தம் தோற்றம்
பிறவோர்க்குப் பெரும்பேறு அவர்தம் ஞானம்
அறியார்நெஞ் சறிவூ ற அறிவுச் சொற்கள்
அறைவார்நல் உரைகேட்டார் அறிவார் கீழ்மைச்
சிறியார்தாம் அறியார் உளத் திருநாள் தன்னில்
பெரியார்தான் நம் அண்ணா அறிவுச் செல்வம்
பேராளன் துணைநிற்கச் சிறுமை ஏது

Tuesday, November 24, 2009


அன்புச் சாதம்


காதலின் பரிணாமம்

உள்ளத்தை
உறைய
வைப்பது காதல்
என்றால்
காதலை
உணர வைப்பது
காலம் எனலாமா?

காலத்தின்
மாற்றத்தில்
காதலும்
மாறுவது
காதலின்
பரிணாமம்
எனக்கொள்வோம்.

10ல் வரும் காதல்
பள்ளிக்காதல்
பக்கத்து பையனின்
புத்தகங்கள்
புதுமையாத் தோன்றும்

உணர்வில் மட்டுமே
தோன்றி பின்
தொடர்ந்து வரும்.

காலங்கள் கடந்து
அசைபோட வைக்கும்
அம்சமான காதல்

காமம் இல்லாத காதல்
இது......
காலத்தை வெல்லும்
காதலும் இதுவே......

15ல் வரும் காதல்
பருவக் காதல்
பார்த்தது
அனைத்தும்
பிடித்துப் போகும்.

வாயடித்து சண்டை போட்ட
வயதெல்லாம்
வாயடைத்து
வெட்கி நிற்கும்

கண்ணாடிகள்
கர்வம் கொள்ளும்
ஆம்!
கண் பாராதா
என்று
காளையர்
காத்துக் கிடக்க
கண்டேனே
உன்னை என்று
கண்ணாடியை
கட்டிக் கிடக்க
கண்ணாடிகளும்
கர்வம் கொள்ளும்.

20 ல் வருவது
வஞ்சியின் காதல்
வாலிபத்தின்
வளைவு, நெளிவுகள்
வட்டமடிக்க..
வஞ்சியின்
வாளிப்பு
பட்டமடிக்க
சின்ன சின்ன
ஆசைகள்
சீறி சிறகடிக்க,

நடந்து வந்த
நிழல்கள்
நம்மை
நிராகரிக்க
தனிமைகள்
தனித்தனியாய்
தவித்திருக்க
தொடர்ந்தது காதல்
35 ல் வரும் காதல்
முதிர்ந்த காதல்
முன்னுரைத்த
காதல்
முதுமைக்கு
முன்னுரையாய்
கண்ணுறங்கும்
நேரத்திலும்
கடமைக்கு
கட்டுப்பட்டு
பொன், மணி என்று
பொருளுக்கு
ஆசைப்பட்டு
காதலின்
சாயலை மட்டும்
சுமந்து
சம்ப்ரதாயத்தில்
உழன்று
தனக்கென
யாதும் கொள்ளாமல்
தள்ளாடும் நிலையற்றக்
காதல்..........

50ல் வரும்
காதல்
தாம்பத்யத்தை
தரம் பார்க்கும்
காதல்...
சொந்தங்கள்
சோதிக்கும்
போதெல்லாம்
முதல்
காதல்
முதுமைக்கு
அசையாய் போகும்.
சங்கீதத்தில்
வரும்
சந்தங்களாய்
ஆகிப்போன
பந்தங்கள்
தத்தம்
பங்கிற்கு
சொல்லிவிட்டுப் போடும்.
நிலை
நின்று பறிபோகும்.

கொல்லைப்புறக்
காற்று
கொடியசைத்து
கூப்பிட்டாலும்
தொல்லைதரும்
சுற்றம்
சுகமாகத் தோன்றும்.

கைப்பிடித்த
காதல்
காத்திருக்க
காலத்தின்
பிடியில்
காணாமல்
போனது
இந்தக்காதல்.........

60 க்கு மேற்பட்ட
காதல்
ஆனந்தக் காதல்
ஆயுளின்
அஸ்தமனக்
காதல்.....

வாழ்க்கைப்
பாடங்களின்
கூட்டல், கழித்தல்களை
கணக்கிட்டு
பின்
பெருக்கிவிட்ட
சந்ததிகளை
சந்தோஷப்படுத்த
வகுத்துக்கொண்ட
வழிமுறைக்காதல்.

நிலை
ஏழாக இருந்தாலும்
நிலைத்து வாழும்
காதல் மட்டும்
ஒரே நிலையாய்
இருந்திட
அலை அலையாய்
பெருகிவரும்
ஆனந்தத்தை
ஆராதித்து
ஆர்ப்பரிக்கும்
இந்த
அறுபதின்
நிலையே
ஆனந்தத்தின் எல்லை............

..........


—————–சாதியை ஒழிக்க யாரை வீழ்த்துவது ?—————————-
“சாதி என்பது, இந்துக்கள் ஒருவரோடொருவர் கலந்து விடாமல் தடுக்கிற ஒரு செங்கல் சுவரோ, முள் வேலியோ அல்ல. அப்படி சாதி வெறும் சுவராகவோ, வேலியாகவோ இருந்தால் அதைத் தகர்த்துவிடலாம். சாதி என்பது ஒரு கண்ணோட்டம் – ஒரு மனநிலை. எனவே, சாதியைத் தகர்ப்பது என்றால், வெறும் பவுதீகத் தடையைத் தகர்ப்பது என்பது அல்ல. மாறாக ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை. சாதி என்கிற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகிறேன். என்னுடைய இந்தக் கருத்து சரியானதென்றால், நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி – சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி.”
——–புரட்சியாளர் அம்பேத்கர்

Monday, November 23, 2009





என் உயிர் தோழியே!!!

இணையத்தில் தோழியாகி
இதயத்தில் புகுந்து விட்டாய்
நல்ல நட்பினால்
நெஞ்சத்தில் நிறைந்து விட்டாய்


பாசாங்கு இல்லை,
முகமூடி இல்லை;
வார்த்தை ஜாலங்கள் இல்லை;
வெறுப்புகள் இல்லை;
போலி வேஷமும் இல்லை;


நட்பின் இலக்கணமாய்
நாங்கள் இருக்கிறோம்;
உள்ள தூய்மையோடு
உறவாடுகிறோம்;


வர்ண தோரணை கட்டி உன்னை
வரவேற்கிறேன் என் மன கூட்டுக்குள்..
உண்மையின் நிழலாய் வருகிறேன் என்கிறாய் நீ.
வேண்டாமென சொல்வேனா என் உயிர் தோழியே!!!

உண்மையான நட்பு

கனவுகள் பூக்கும்,
எண்ணங்கள் கைக்கு எட்டும்,
முட்பாதைகள் எல்லாம் மணக்கும் மலர்களாகும்,
வாழ்வில் எப்போதும் வசந்தம் வீசும்,
நீ உண்மையான நட்பு கொண்டிருந்தால்..
எங்கிருந்தாய் இத்தனை நாளாய்
உன்னை கண்ட நாளினிறு
என் உலகமே மாறிற்று
என் மொத்த ஆயுளும்
உன்னிடம் தவமாய் கலைந்தது
எத்தனை முகங்களை கடந்தாலும்
நீ மட்டும் என் மனதில்
என்றும் முழுமதியாய்
அதிர்ஷ்டம் உன் உருவில்
என் இதய கதவை தட்டுகிறது
திறக்கின்றேன் எபோதும்
உனக்காக மட்டுமே என்று ...!!!!!

வைரத்துளிகள்




°ღ•பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்,
வாய் மூடி இருப்பதுஅல்ல°ღ•
°ღ•செல்வமும் மதிப்பும் பெருக பர்ஸையும், வாயையும்,
அதிகம் திறக்காதே°ღ•
°ღ•பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும், பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்°ღ•

பொய் !!!!!!!!!
நீ என் கண்மணி
நீ என் உயிர்
நீ என் ஜீவன்
நீ இன்றி நானில்லை
என்றல்லாம் பொய்
சொல்ல விரும்பவில்லை
உன்னுடன் வாழவே விரும்புகிறேன்
நீ இல்லாவிட்டாலும்
உன் நினைவுகளை சுமந்துகொண்டு!!!!!!!!!!

Sunday, November 22, 2009

இன்றைய நாள், நான் படித்ததில் பிடித்தது………….

நவம்பர் 23, 2009 by muilavarasan குருவிடம் சிஷ்யன் சொன்னான்.
“தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?”
“மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?” குரு கேட்டார்.
“புரியவில்லை குருவே..”
“எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?”
“எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்..”
“கழுதையைப் பின்னால் தட்டினால்?”
“தட்டியவரை எட்டி உதைக்கும்..”
“ஆனால் குதிரை..?”
“முன்னால் பாய்ந்து செல்லும்..”
“புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்..”
சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.
—————————————————————–
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
“நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்
எனக்கு அனுப்பியவர் – நண்பர் –ராஜ்
அம்மாவுக்கு……………….


கருவறைக்குள் சிறை வைத்து……..
பாசத்தால் கைது செய்து…….
வாழ்க்கை எனும் போராட்ட களத்தில்………
போராட்ட களத்தில் தவழ விட்ட………
தாய்மையே………………



உன்னை வணங்குகிறேன்………………………..

Saturday, November 21, 2009

அப்பா .......!!!!!!!
என் தாய்
பத்து மாதம்
கருவில் சுமந்தாலும்
அன்றிலிருந்து என்னை
நீ இதயத்தில் சுமந்தாய்
உனக்கானவைகளை தவிர்த்து
என் எல்லா விருப்பங்களுக்கும்
தலை சாய்த்தாய்.....!
என் கனவுகளுக்கு
விடை கொடுத்திடா
உறவுகளை விட
என் இலச்சியங்களுக்காய்
உயிர் வாழ்கிறாயே !!!!!!!!!
உன்னை விட உயர்ந்தது
ஏதுமில்லை எனக்கு !!!!!!!!!!!

jeevavin kavidhaigal

கண்ணீர் என்பது
எனக்கு புதிது
அது உன்னால்
என்பதை தான்
மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது
இதுவரை என்
புன்னகைக்கு
பின்னால் இருந்தவள் நீ
இன்று என் கண்ணீருக்கும்
காரணமாய் .....!!!!!
புரிந்துகொள்லடி
நீ காயபடுத்துவது
உன்னை நேசிக்கும்
இதயம் என்பதை ............!!!!!!!!!!

jeevanavin kadhal kavithigal

என்னவளை ஒன்றுடன் ஒப்பிட்டால்
அவள் என் இரவு கவிதை
நடு நிசியில் என் தூக்கத்தை
திருடிவிட்ட அவள் நியாபகதிற்காய்
மொட்டை மாடியில்
ஒற்றை நிலவொளியில்
நான் எழுதிய கவிதை
அவளே தான் .......!!!!!!!!!!

Friday, November 20, 2009

"ஒவ்வொரு சொல்லிற்கும்,செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்துள்ளது."
--- - கார்ல் மார்க்ஸ்.

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
-- டாக்டர் அம்பேத்கர்
----------------------------------------
-----
"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்
''
---- புத்தர்
---------------------------------------------
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால் நாம் நண்பர்களே --- -சேகுவேரா
--------------------------------------------
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான
உன் உரிமையை காக்க
என் உயிரையும் கொடுப்பேன்

--- வால்டேர்
-------------------------------------------
சில சமயங்களில் முடிவுகளைவிட முயற்சிகள் அழகானவை. பலன்களைவிட செயல்கள் மேன்மையானவை;.
--------------------------------------------
நாம் முன்னோக்கி பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் கண்கள் முதுகு பக்கம் இல்லை.
---------------------------------------------
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,
யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே
சுதந்திரமான மனிதன் என்பேன்
.
---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
---------------------------------------------
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை
நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்

----மாவோ
---------------------------------------------
பாதையை தேடாதே, உருவாக்கு--லெனின்
---------------------------------------------

விபச்சாரத்திற்குக் காரணம்.....

விபச்சாரத்திற்குக் காரணம்.....

ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்



‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.

ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.

சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.

காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.

பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?

ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?

மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.

ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.